பாலாபிஷேகம்

எத்தனை
இன்னல்கள்
எத்தனையோ
அவலங்கள்
எண்ணிலடங்கா
பசி பட்டினிகள்
இத்தனையும்
தாங்கிக்கொண்டு
ஊதாரி குடிக்கார கணவனுக்கு
நல்ல மனைவியாக
வாழ்ந்து தன் பிள்ளைகளை
கரை சேர்க்கும்
இந்த தாய்மார்கள் தான்
உண்மையான தெய்வம்
பாலாபிஷேகமும்
கனகாபிஷேகமும்
இந்த தெய்வங்களுக்குத்தான்
முதலில் செய்யவேண்டும்
மற்ற தெய்வங்கள் எல்லாம்
இதற்கு பிறகுத்தான்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (21-Nov-19, 12:00 am)
Tanglish : paalaabishegam
பார்வை : 197

மேலே