தவற்றை மறைத்தல்
தவற்றை மறைத்தல்
அருவியாய் வந்து
விழும் வார்த்தைகள்
மதுரமாய் என்றிருந்தது
ஒரு காலம்
இனி வாசிக்க என்னிடம்
வார்த்தைகள் இல்லை
வார்த்தை ஒன்றுமில்லா
வாசல்களாய் நான்
தோல்வியை
ஒப்புக்கொண்டு
மெளனத்தை மொழியாக்கி
சாட்சியாய் நிற்கின்றேன்
வெற்றி பெற்ற மன
நிலையில் அவள்
இருந்தாலும்
தவறை
வார்த்தைகளால்
மறைத்து விட்ட
குற்ற உணர்ச்சியில்
தடுமாறினாள் !