வஉசி
காசுக்காக
அரசியல் காணும்
மாந்தர் நடுவே...
காசிழந்து கப்பலை இழந்து
நாட்டின் சுதந்திரத்திற்கு
வன் சிறையில்
செக்கிழுத்த செம்மல்
வ.உ.சி... உனது
தியாகம் ஈடில்லாதது...
அந்நியனிடம் விழாத்தலைவன்
சரித்திரத்தில் வீழாத்தலைவன்...
சுதந்திர இந்தியாவின்
விழாத் தலைவன்...
வ.உ.சி... நீ.. நீ.. நீ....
சென்ற பல்லாயிரம்
வரும் பல்லாயிரம்
ஆண்டுகளில் உலகம்
காணாது உன் போல்...
சாக்கடையில் நனைத்த
சாக்கை சிறையில்
உனக்கு உடுத்தினராம்
பாவிகள்... இருந்தும்
ஆங்கிலேயனுக்கு அடி
பணிந்து வாழ்ந்திடவில்லை நீ...
நீ வாழ்வாய் என்றும்...
உனது ஈடில்லா வரலாறோடு
இணையில்லா புகழோடு...
நீ பிறந்த நாட்டில்
நாங்களும் பிறந்து
வாழ்கிறோம் என்ற கர்வத்தை
கௌரவத்தை நீ எமக்களித்தாய்...
நன்றியுணர்வில் நின்
தாழ்பணிகிறோம்...
🙏👍💐👏🌹🙏