பிறழ்வு
பிறழ்வு
நொடிகள் யுகங்களாய்
கழிந்து கொண்டிருக்கும்
மற்றுமொரு பொழுது,
மனக்கண்ணில் நின்று
ஒளிர்கிறது
உன் அன்புமுகம்!
பிரிவுத்துயரின்
பிரதிபலிப்பாய்
என்முகம்!
உன் இரசனைக்குரிய
என் எண்வகை மெய்ப்பாடும்
பெரும்பாடாய்க்
கருதப்படுகின்றன
பிறிதொருவரால் . ..
நம் இருவரது
வாழ்வினிடை பணம்
வந்து வசிக்கிறது
வசதியாய்...
கணினி
கணிசமாய்த் திருடுகின்றன
எனக்கான
உன் நேரங்களை...
வாழ்வைத்தேடியபடி
வாழ்வைத் தொலைக்கும் பலரைப்போலவே
வாழப்படுகிறதோ
நம் வாழ்வும்...
என்னை பிரிவென்னும்
இருள் தள்ளி
என்
பொருள் தான் தேடுகிறாய்
என் செல்ல அம்மாவே!