தமிழா விழித்தெழு
தமிழா! விழித்தெழு!!
பேச்சிலும் எழுத்திலும் நாள்தோறும் நடைபயிலும்
பிறமொழித் தாக்கம் ஏனோ?
உணவிலும் உடையிலும் வேரூன்றி கலந்திட்ட - உன்
வெளிநாட்டு மோகம் ஏனோ?
பட்டி தொட்டி எங்கும் பட்டொளி வீசிநின்ற - உன்
பண்புதான் மறைந்ததெங்கே?
பாரோர் யாவரும் வியந்திங்கு போற்றிய - உன்
உயர்கொள்கை போனதெங்கே?
மிடுக்குற்று நின்ற நீ செருக்குற்று இந்நாளில்
சிந்தை அழிந்ததேனோ?
பரிமளம் வீசியே மணம்பல பரப்பிய - உன்
பண்பாடு சென்றதெங்கே?
வீணனாய் வந்தோனும் வாழ்த்தியே போற்றிய - உன்
வெற்றி நலன்கள் எங்கே?
விழித்தெழு தமிழா! கொதித்திடு நாளும் - உன்
புதுமை மோகம் கண்டு!
பூத்திடு மலர்ந்திடு புதுமணம் பரப்பியே
எந்நாளும் ஒன்று போலே!!
அன்புடன் விஜயலஷ்மி
கோயம்புத்தூர் 22