காதலின் பசி
முத்தம் தருவாய் என பசியோடு
காத்திருக்கிறது என் கன்னங்கள்
ஆப்பிள் கடிப்பது போல்
ஒரு கடி கடித்தால் போதும்
காதல் சுவை உணர்ந்து கொள்வேன்
காதலன் சத்தமெல்லாம்
காதணியாய் காதோடு உரசுது
முந்தானையில் மனு எழுதி
முத்தங்களை முத்துக்களாய் பதிக்கிறாய்
நாணத்தால் நானும் மின்னுகிறேன்
முத்து சிரிப்புகள் முத்தமிடுவதால்
சத்தத்தோடு சத்தமாய்
சிரிப்பானது முத்தம்
காற்றோடு கைவீசி
காதலை சுவாசிக்க ஆக்சிஜனாய்
நீ வந்தாய்
ஒற்றை பூவாய் நடந்து வந்து
நறுமணம் தரும் சந்தனமே
சற்று என்னை அள்ளி பூசி
உடலோடு உணர்வாக்கு
காக்க வைக்கிறாய்
காத்திருக்கிறேன்
காதலே வா வாழலாம்
காலம் நம்மோடு...
BY ABCK