தொழில் வாரிசு
திருடர்களின் தலைவன் தனது வாரிசை அறிமுகம் செய்தல்::
■■■■■■◆◆◆◆◆◆◆◆
அன்புத் தம்பிகளே,
என்னிடம் தொழில் கற்ற நீங்கள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு நம் தொழிலுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். சென்ற மாதம் நடைபெற்ற நமது பொதுக்குழுக் கூட்டத்தில் செயல்குழுவின் முடிவின்படி பட்டப்பெயர் பெற்று அடிக்கடி செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் நம் மாநிலம் முழுவதும் அறியப்பட்டவர்களைச் சிறப்பித்தோம்.
பலமுறை திருடியும் காவலர்களிடம் சிக்கி நீதிமன்றம் சென்று இதுவரை தண்டனைப் பெறாமல் இருக்கும் நம் தோழர்களுக்கு கவுரவப் பட்டங்களை அளித்து சிறபித்தோம்.
நமது இளம் தோழன் ராஜா பதினாறு வயதிலேயே இரண்டே ஆண்டுகளில் இரண்டு கோடி மதிப்புள்ள நகைகளைத் திருடி சாதனை படைத்துள்ளான். அவனது திறமையைப் பாராட்டி அவனுக்கு 'முகமூடி' என்ற பட்டப்பெயரை அறிவிக்கிறேன். அவனை இனிமேல் 'முகமூடி ராஜா ' என்றுதான் கூப்பிடவேண்டும்.
முகமூடி ராஜா:
@@@@
வாழ்க வாழ்க வாழ்க!
@@@@@@
நல்லது தோழர்களே. ஒரு விபத்தில் சிக்கி
எனக்கு ஒரு கால் உடைந்து முட்டிக்கும் கீழே காலை மருத்துவர்கள் துண்டித்து விட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என்னால் இனி நம் தொழிலில் ஈடுபடமுடியாது.
நமது சங்கத்தைப் பதிவிட சட்டம் அனுமதிக்காது. திருடுவது குற்றம். எனினும் நமக்கு அது தொழில் ஆகிப்போனது. சங்கத்தைப் பொறுப்பாக நடத்த வாரிசு தேவை. உலகெங்கும் பிரபல அரசியல் கட்சிகள் உடையாமல் இருக்க குடும்ப வாரிசு அரசியல் நடக்கிறது. அரசியல்வாதிகள் , வணிகர்கள், நடிக, நடிகயையர், பத்திரிக்கையாளர் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் சிலரை வாரிசுகளாக அறிவிக்கிறார்கள்.
நமது சங்கத்தைக் கட்டிக்காக்க எனது வாரிசை அறிவிக்க வேண்டும். எனது மகன் சோர்ஜி பட்டதாரி. அவனை எனது வாரிசு ஆக அறிவிக்க நமது செயல்குழு ஒப்புதல் தந்துவிட்டது. பொதுக்குழு ஒப்புதலைத் தந்தால் நல்லது.
@@@@@@@
செயல்குழுவின் முடிவை உளமாற ஏற்கிறோம் தலைவரே.
@@@#@@@
சோர்ஜி
@@@@@@@
வாழ்க! சோர்ஜிக்கு ஜிந்தாபாத்து.
@@@@@
நல்லது தோழர்களே. உங்கள் முன்னிலையில் எனது வாரிசான செல்வன் சோர்ஜியிடம் சங்கப் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன்.
(பலத்த கைதட்டல்)
@@@@@@
தலைவரே தமிழர் வழக்கப்படி இளம் தலைவருக்கு இந்திப் பேரை வச்சிருக்கிறீங்க. சோர்ஜிக்கு என்ன அர்த்தம் தலைவரே?
@@@@@@@
தோழர்களே, இந்தியில் 'சோர்' (Chor = thief) என்றால் 'திருடன்' என்று அர்த்தம். நம் மக்கள் அர்த்தம் பார்த்து வேற மொழிப் பெயர்களை வைப்பதில்லை. ஒரு பெயருடன் 'ஜி' சேர்த்தால் அந்தப் பெயருடையவருக்குத் தரும் மரியாதை. சோர்ஜி என்றால் 'சோர் அவர்களே' என்று கூறுவதற்கு சமம்.
இத்துடன் நான் விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
#@###@@@@@
தலைவர் வாழ்க! இளம் தலைவர் சோர்ஜி வாழ்க.