வன்மங்கள் மறுத்திடுவீர்

வன்மங்கள் மறுத்திடுவீர்

மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக
மாசற்ற அரசியல் கொள்வீர்
நக்கல் குணத்தால் நாளை ஓட்டுதல்
நாளும் நாடும் கெடுவீர்.....!

வழிகள் பலவுண்டு உண்மை அறிந்திடுக
வாழும் போதே செய்வீர்
அழியும் எண்ணங்கள் தொலைத்திடு
ஆறலும் அறிவும் தந்திடுவீர்.......!

துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக
தூய்மையும் துடிப்பும் அடைவீர்
பணிவும் பாசமும் அணைத்தே செல்கவே
பாவமும் துன்பமும் கானல்நீர்.......!

பகட்டால் வாழ்வில் கேடுகள் குறைத்திடுக
பண்பாளர் நெறிதனில் செல்வீர்
சுகதுக்கம் வருவதே இயற்கையே புரிந்திடுக
சூதாட்டம் களைந்தே வாழ்வீர்......!

வன்மங்கள் கூடிட்ட இந்நாளை உணர்ந்திடுக
வாழ்வினை பொன்னாய் ஏற்றிடுவீர்........!


***********************************

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (24-Nov-19, 9:21 am)
சேர்த்தது : வேமஅருச்சுணன்
பார்வை : 180

மேலே