குருட்டுக் கண்அஞ்சு மோஇருளைக் கண்டு – நன்னெறி 34

நேரிசை வெண்பா

அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்அஞ்சு மோஇருளைக் கண்டு. 34 - நன்னெறி

பொருளுரை:

பிறை போன்ற நெற்றியை உடையவளே! அழகு தரும் ஒளி பொருந்திய விழி இருளைக் கண்டு அஞ்சும். குருட்டுக் கண் இருளுக்குப் பயப்படுவதில்லை.

அது போல அறிவுடையோர் அன்றி அறிவு இல்லாதவர் தம்மைச் சேரும் பழியைக் கண்டு அஞ்ச மாட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-19, 10:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே