நாம் மறந்து போன ஆத்திச்சூடி

இன்றைய கணனி யுகத்தில் நாம் மறந்து போன நல்ல செய்த்தைகள் /செயல்கள் எத்தனையோ . நாம் மறந்தது மட்டும் இல்லாமல் நாம் நம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்ல அல்லது வழிகாட்ட தவறியவர்கள் ஆவோம் .நம்பர்களே இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் .அடுத்த தலைமுறையாவது நெறியோடு வாழட்டும் , நல்லவைகள் ஒலிக்கட்டும் அல்லவைகள் தொலையட்டும் .

ஆத்திச்சூடி ..

ஓதாமல் ஒரு நாளும்
இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு
சொல்ல வேண்டாம்

மாதாவை யொருநாளும்
மறக்கவேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோ
டிணங்க வேண்டாம்

போகாத விடந்தனிலே
போக வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித்
திரியவேண்டாம்

நெஞ்சார பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம்

நஞ்சுடனே யொருநாளும்
பழக வேண்டாம்

நல்லிணக்கம் இல்லரோ
டிணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே
போக வேண்டாம்

அடுத்தவரை ஒருநாளும்
கெடுக்க வேண்டாம்

மனம்போன போக்கெல்லாம்
போக வேண்டாம்

மாற்றானை உறவென்று
நம்பவேண்டாம்

தனம்தேடி யுண்ணாமல்
புதைக்க வேண்டாம்

தருமத்தை ஒருநாளும்
மறக்க வேண்டாம் ..

எழுதியவர் : வசிகரன் .க (24-Nov-19, 10:41 am)
பார்வை : 223

மேலே