வருடல் சத்தங்கள்

புது இறகுகள் பற்றிக்கொண்டு
காதலாய் பறக்குது
இருதய கண்ணாடி பிம்பங்கள்
உன் நினைவுகளை சுமக்குது

சாரல் காற்றோடு
தூறல் முத்தங்கள்
காதல் காற்றோடு
வருடல் சத்தங்கள்

புகைப்படம் எடுக்கும் உன் கண்களுக்குள்
நான் புதுப்படம் ஆகிறேன்
இமை மூடி மறைக்கும் அன்பே
கொஞ்சம் இதழ் திறந்து அணைப்பாயா

BY ABCK

எழுதியவர் : (25-Nov-19, 7:44 pm)
பார்வை : 86

மேலே