மாறுமா மாறுமா
சாதி பார்க்காதே
உயிர் காற்று எந்த சாதி
தனித்துவம் பேசாதே
மனித பொதுத்துவம் பேசு
கடவுள் எந்த சாதி என்று கண்டதில்லை
இடையில் நீ மட்டும் ஏன் சாதியை தேடுகிறாய்
திருக்குறளின் பொதுமறை தெரிந்தும்
சிலகுரல்கள் இன்று சாதியென சத்தமிடுகிறது
தீப்பெட்டிக்குள் தீ குச்சியாய் உறங்குகின்ற சாதியினை
சிலர் தீ பந்தமாய் எரியவைப்பது இன்றோடு ஓயட்டும்
மொத்தத்தில் எல்லோரும் இந்திய தாயின்
பிள்ளையாய் இருப்போம்
மார்பகம் வேறாக இருந்தாலும்
பால் என்பது ஒன்றுதானே
மதங்களை புதைக்குழியில் புதைத்துவிட்டு
புதிய மனிதனாய் புன்னகைத்து எழும்புவோம்
சாதிகளே இல்லாத ஒரு தாய்நாடு வேண்டும்
சாதியெனும் போர்க்கொடி தூக்கியது போதும்
இனி யாவரும் சமமென நேசக்கொடி பறக்கட்டும்
சாக்கடையில் புரல்வதைவிட
அது வரும் பாதையினை மூடிடுவோம்
அசுத்தம் மறைந்து
நறுமணம் மலரட்டும்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது
வெறும் வார்த்தையாக இருக்கின்றது
வேறு யாரோ செய்கின்ற சதி
நம்மை வாழவிடாமல் தடுக்கின்றது
நான்கண்ட கொடுமை இந்த தலைமுறையோடு மூழ்கட்டும்
இறந்தோர் சவக்கிடங்குகளில் ஜன்னல் வைத்து
இனி சாதிகள் இல்லையென கூறட்டும்
மதங்களை தூரம் எறிந்துவிடு
மனிதனை மட்டும் தேடி பழகிவிடு
கட்டிவைத்து அடிப்பதை விட ஒரு முறை
கட்டியணைத்து முத்தமிடு எச்சில் ஈரத்தில்
கோபம் காயட்டும்
இனி ஒன்றாய் சேர்ந்து பயணிப்போம்
யாரையும் எரித்துவிட வேண்டாம்
எங்கள் வீட்டு பிரியாணி எல்லோர் வீட்டிலும்
பரிமாற வேண்டும்
உங்கள் வீட்டு விசேஷத்திற்கு எங்கள்
உறவுகள் வரவேண்டும்
BY ABCK