பேசில் இவையுடையாள் பெண் - நீதி வெண்பா 30

நேரிசை வெண்பா

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண். 30 நீதி வெண்பா

பொருளுரை:

சொல்லப் போனால், ஒரு மனைவி கணவனிடம் தாயைப் போல கருணையும்,

பணிப்பெண்ணுக்கு உரிய பணிவுடன் அமைந்த தொண்டும்,

செந்தாமரைப் பூவிலிருக்கும் சீதேவியைப் போன்ற பொன்னான அழகும்,

பூமியைப் போல பொறுமையும், அழகிய தனங்களையுடைய விலைமாதைப் போன்ற போகமும்,

ஆலோசனை சொல்வதில் திறமையுடைய மந்திரி போன்ற புத்திக் கூர்மையும் உடையவளே பெண் எனப்படுவாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-19, 10:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 238

சிறந்த கட்டுரைகள்

மேலே