பெண்பலர்தாம் பேசிலுலகு என்னாமோ பின் - நீதி வெண்பா 31

நேரிசை வெண்பா

பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள் - பெண்மூவர்
பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்
பேசிலுல(கு) என்னாமோ பின்! 31 நீதி வெண்பா

பொருளுரை:

அறியாமைப் பெண்ணே! தன்னடக்கம் இல்லாமல் ஒரு பெண் கத்திப் பேசினால் இந்தப் பெரிய பூமி அதிரும்.

அவளுடன் இன்னொரு பெண்ணும் சேர்ந்து பேசினால் வானத்து விண்மீன்கள் எல்லாம் கீழே விழுந்து விடும்.

அவர்களே மூன்று பேராக இருந்து பேசினால் கடலில் வீசும் அலைகள் ஒய்ந்து கடல் நீரும் வற்றிப் போய்விடும்.

இவளைப் போல பல பெண்கள் பேசினால் இந்த உலகம் என்னாகுமோ? என வியந்து கேட்கிறார் இந்தப் பாடலின் ஆசிரியர்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-19, 8:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 111

மேலே