கன்னத்தில் வழியும் கண்ணீர் துளிகள் 555

என்னுயிரே...


நான் உன்னை நேசிப்பது
உனக்கு தெரிந்திருந்தும்...

என் காதலின் ஆழம்
உனக்கு தெரியவில்லையடி...

எல்லைமீறி உன்னை
நேசித்ததால் என்னவோ...

என்னையும் மீறி வழிகிறது
கன்னத்தில் கண்ணீர் துளிகள்...

சொர்கத்தைவிட சிறந்தது
உன் நினைவுகள்...

எனக்குள் சுகமாக
இருப்பதால்...

எனக்கு நீ வலிகளை
கொடுத்தாலும்...

என் காதல் என்றும்
உன்னை வெறுக்காது என்னுயிரே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Dec-19, 3:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 602

மேலே