அன்பு மகளே நீ
அறிவுப் பெட்டகம் நீ
ஆற்றல்சால் பல்கலை நீ
இனிமையில் தனித்தமிழ் நீ
ஈவாய் கனிவை மழையாய் நீ
உலகை உணர்வாய் நீ
ஊர் மெச்ச உயர்வாய் நீ
எங்கள் உயிரே நீ
ஏந்திழையின் வியப்பே நீ
ஐயமில்லை அறிவே நீ
ஒளிர்வாய் நிலவாய் நீ
ஓடும் நதியாய் தெளிவாய் நீ
ஒளவை கவியாய் நீ
அஃதே அன்பு மகளே நீ!

