நட்பு 🤝🙏

நட்பு 🤝🙏

"நான் பிழைத்து விட்டேனா.
என்ன அதிசயம்.
உண்மை தான் நான்
பிழைத்து விட்டேன்.
மருத்துவரே... நன்றி...
மிக்க நன்றி.... "

"நன்றி, எனக்கு சொல்வதை விட உங்கள் நண்பருக்கு சொல்லுங்கள்.
உங்கள் உயிரை காப்பாற்றியது.....
உங்கள் நண்பன்...
இதோ அவர் உங்களுக்கு எழுதிய கடிதம்.."

ஆருயிர் நட்பே,

உன்னை ஆசையாய் காண ஓடோடி வந்த எனக்கு பேர் அதிர்ச்சி.
உனக்கு இந்த நிலைமையா?
உன் விழுதகள் மருத்துவமனை வாயிலில் கண்ணீரும் கம்பலையுமாக....
மனம் மிகவும் வலிக்கிறது.
நண்பா....
நீ இளமை என்னும் பூங்காற்றை முழுவதும் அனுபவித்தவன்.
பம்பரம் என சுழன்றவன்.
முகராசிக்கு முகவரி கொடுத்தவனே
உம்மனா முகங்களையும் சிரிக்க வைத்தவனே
தன்னம்பிக்கையின் உச்சமே
கல்லூரி நாட்களில் உன் கவிதைக்கு ஏங்கிய மங்கையர் கூட்டம் மிக அதிகம்.
நட்பை வரமாக பாவித்து
பல நட்புக்கு வாழ்க்கை வகுத்து கொடுத்தவனே
காதலில் வெற்றி கண்டு
வாழ்க்கை என்ற படகை திறம்பட செலுத்தியவனே
மானுட செல்வங்களை அனைத்தும் பெற்றவனே
மருந்துக்கும் யாருக்கும் துரோகம் நினைக்காதவனே
என் இனிய நண்பனே
உன் உடல் நிலைமை குறித்து
மருத்துவர் எடுத்துரைத்தார்
பணம் நிறைய உன்னிடம் உண்டு
ஆனால் அதை பெற
காலதாமதம் ஆகும் என்றார்.
மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும்
இல்லையேல் உங்கள் நண்பனை...... உயிருடன் .... பார்க்க....
கவலை வேண்டாம்
என் உயிரையே தர தயாராக நான் இருக்கும் பட்சத்தில் இது எனக்கு சர்வசாதாரனம்.
நான் என் சிறுநீரகத்தில் ஒன்றை உனக்கு தருவதாக ஒப்புக்கொண்டேன்.
கவலை வேண்டாம்.
நீ நன்றாக ஆகிவிடுவாய்.
உன் குடும்பம் மிக பெரியது.
நீ ஆலமரம்
உன் விழுதகள் உன்னை தாங்கி பிடித்தாலும்
மரம் நீ உயிருடன் இருக்க வேண்டாமா.

என்ன ஒரு அமர்களமான நட்பு நம்முடையது.
ஆஹா! அந்த நாட்கள்....
அற்புத நாட்கள் இனி வருமா.....
வரவே வராது......
ஒன்றாய் இருந்த நம்மை பிரித்தது இந்த வேலை தான்.
வடநாட்டில் குடியேறிய நான், அயல் நாட்டுக்கு போக வேண்டிய சூழ்நிலை. உனக்கு தான் எல்லாம் தெரியுமே.
சம்பாதித்தது போதும்
உன் சம்மதத்துடன் நான் காதலித்த என்னவளை கரம் பிடிக்க தாயகம் திரும்பினேன்.
கல்யாண ஏற்பாடும் தடபுடலாக நீ ஏற்பாடு செய்தாய்.
திருமணத்திற்கு முன் தினம்
என் மனதை சுக்குநூறாக ஆக்கியது அந்த செய்தி
அவள் விபத்தில் சிக்கி.....
என் வாழ்க்கை மயாணம் ஆனது.
அவள் நினைவு என்னை வாட்டி வதைத்தது.
உன்னிடம் கூட சொல்லாமல் என் கால் சென்ற திசையில் சென்றேன்.
காலங்கள் ஓடியது.
ஆனால் அவள் நினைவு என்னை விட்டு அகலவில்லை.
மாற்றம் ஒன்றே மாறாதது.
உயிரை விட தைரியம் இல்லாமல் இல்லை
அதனால் என்ன பயன்.
முடிவேடுத்தேன் ஏதாவது பயன் உள்ளதாக செய்ய வேண்டும் என.
இன்னமும், மின்சாரம், கழிப்பறை இல்லாத கிராமகங்களை தேடி கண்டு பிடித்து அவர்கள் வாழ்க்கை மேம்பட என் வாழ்க்கை முழுவதும் அற்பனித்தேன். அதில் ஏதோ ஒரு மன நிறைவு உள்ளதாக கருதுகிறேன்.
இந்த மாற்று அறுவை சிகிச்சை எனக்கு ஏதும் ஆனால் எனக்கு அதை பற்றி துளியும் கவலையில்லை.
காரணம் நான் தனி மரம்.
நீ கேட்கலாம் உன் சேவை என்னவாகும் என்று.
நிறைய படித்த தம்பிகள்
மணிநேயத்துடன் என்னுடன் உள்ளார்கள்.
அவர்கள் பார்த்து கொள்வார்கள்.
ஆயிரம் தான் அறிவு இருந்தாலும், எல்லோருக்குமே வாழ்க்கை ஒரு புரியாத புதிர் தானே.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், நீ கடவுளை முழுவதும் நம்புபவன்.
அறிவியல் வளர்ச்சி நம் இருவரையும் காபாற்றும்.
இது என் கூற்று. நல்லது நடக்கும்.

- உன் உயிர் நண்பன்.

மருத்துவரே என் நண்பன் எங்கே....
என் ஆருயிர் நட்பு எங்கே...

ஒரு நிமிடம்....
இதோ ..... உங்கள் நண்பர்.

இருபத்தைந்து ஆண்டு பிரிவு...

இப்படி பிரிந்த நண்பர்கள் திடீரென்று என்று சந்தித்தால்....
ஆனந்த பரவாகம் கங்கை என இருவர் இடையே ஓட
இருவர் கண்களிலும் சந்தோஷம் பெருக
மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்த இருவரும்
கட்டி அனைத்து
முத்தம் கொடுத்து கொண்டனர்.
அவர்கள் ஆசுவாசம் அடைய ஐந்து நிமிடம் மேல் ஆனது.
" என்னடா ... உன் உயிரையே காபாத்தியிருக்கேன்... ஒரு சின்ன தேங்ஸ் கூட
சொல்லலியே... "
நீ, என் உயிர்டா... எனக்கு நானே தேங்ஸ் சொல்லிக்க முடியுமா..."
" டேய், நீ ரொம்ப சந்தோஷமா இருந்தா, அந்த பாட்டு ... பாடறியா..."
" ஹம்...... அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை உன் கழுத்துக்கு பொருத்தமடி.....

அந்த நண்பர்களின்
வானளாவிய சிரிப்பு.....
அந்த மருத்துவமனையையே அதிர செய்தது.
வாழ்க நட்பு. 🙏
- பாலு.

எழுதியவர் : பாலு (3-Dec-19, 8:07 pm)
சேர்த்தது : balu
பார்வை : 968

மேலே