வழிகள்தான் தேடணும்

வலிகள் ஆயிரம் தீர்க்க
வழிகள்தான் தேடணும்
மனதின் நெருடலை
நேர்பட பேசினால்

காயங்கள் தோன்றுமே என
தயக்கம் நம்மை தடுக்குமே
தயக்கங்கள் தடுப்பினும்
சரியென இருந்திடின்

அதே காயங்கள் திரும்புமே
மனதினை கிழிக்குமே
இதற்க்கு தீர்வுதான்
எதுவென தடுமாறும் மனதினை

கொஞ்சமாய் அழவிடு
கொஞ்சமாய் புலம்பிடு
கொஞ்சமாய் கதறிடு
கொஞ்சமாய் சிரித்திடு

பிறகு ஒரு பதில் வரும்
மனதினில் தெளிவுறும்
அப்போது முடிவெடு
அதில் தெளிவாய் இருந்திடு

எழுதியவர் : ருத்ரன் (4-Dec-19, 12:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 167

மேலே