காவியத் தலைவியே காதல் செய்

உன் சேலை என்னைத் தீண்ட
சில்லிட்டதடி நெஞ்சம்
மழை மேகத்தில் நுழைந்து
உடல் நனையுமாறு நடந்து
உதறல் வந்ததைப் போல் ஆனேனடி

குத்தீட்டி கண்களால் கூர்ந்து நீயும்
என்னைப் பார்க்க உறைந்தேனடி
குடங்குடமாய் தேனை உண்டதைப்போல்
குதுகலித்தே உழன்று சூழல் மறந்தேனடி
சுற்றம் மறந்து பித்தனாய் ஆனேனடி

கையால் உன்னைத் தொட்டு
கட்டித் தழுவிக் கதைப்பேச
கனவு பலக் கண்டேனடி காத்தும் நின்றேனடி
உன் கருமேக தேக நிறத்தை
அழகாய் கைக்கொள்ள நினைத்தேனடி

வட்ட முழு நிலவினிலே
தெரியும் சிறு கறையைப் போல்
சுத்தமான என் இதயத்தில் சின்னதாய்
காதல் தீ எரியத் தொடங்கியுள்ளதடி
காவியத் தலைவியே காதல் செய் என்னை.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Dec-19, 6:29 pm)
பார்வை : 54

மேலே