மறுவார்த்தை பேசாதே

விழி மேகம் மூடாதே...
உறைபனியாய் என்னில் படிந்திடு..
கலை உடலாய் நீ தூங்க
கலைஞனாய் நான் மாறிட..

இதழ் ரேகை உன்மேல்
கவியாய் பதியம் போடும்....
மோக காய்ச்சல் ஒன்று
உயிர் மூச்சில் மிதக்கும்....

உயிர் கோர்க்கும் ஒரே உறவுகள்
இரவொன்றில் இசை அமைத்திட
களையாத மெட்டின் தேகமாய்..
கதைபேசும் ஜீவ வரிகளாய்...

நனையாத மெளன வார்த்தைகள்
நம்மீது கோலம் போட்டிட....
விடிந்தாலும் போர்வை கூட்டினில்
உதிக்காதே ஒளியின் கீற்றுகள்...

(இஷான்)

எழுதியவர் : இஷான் (4-Dec-19, 5:29 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 207

மேலே