அவள் அழகு
விழித்துக்கொண்டே உன் அழகை
ரசித்துக்கொண்டிருக்கையில் உன்
அழகெல்லாம் ஒன்றுதிரண்டு என்
மனதில் புகுந்து என் உள்மனதில்
ஒரு திரைப்படமானது ; விழிப்பு விட்டு
நான் இப்போது உறங்கையிலே
என் கனவானதடி அந்த உன் அழகென்னும்
திரைப்படம் அதில் நான் காண்பதெல்லாம்
உன் அழகின் பலப்பல ரூபங்கள்