அழகே பேரழகே
![](https://eluthu.com/images/loading.gif)
தூவானம் என்று தான் நினைத்தேன் தூரத்தில்
அடை மழையாய் இங்கு பெய்திருக்கிறதே அழகு
கூடை கூடையாகப் பூத்ததா மலர்
இந்தப் பூங்கொடியெங்கும்
ஆசையாய் அவளுடலைத் தொட்டு வந்த காற்று
சேதி சொன்னது அருகில் வந்து காதில்
அவள் பேரழகி என்று
கண்களை மயக்கியது பூவாசம்
ஆற்றாமையால் அவதிப்பட்டது உள்ளம்
அஷ்றப் அலி