மழையில் நனையலாம் வா என அழைத்தாய்

சிந்தித்தேன் வானத்தை
முகில் மழை பொழிந்தது
சிந்தித்தேன் உன்னை
உன்விழிகள் காதல் மழை பொழிந்தது
சிந்தித்தேன் அந்தக் காதலை
என் மனம் கவிதை மழை பொழிந்தது
இன்னும் என்ன மழை பொழியலாம் என்று சிந்தித்தேன்
வாசல் கதவைத் திறந்தேன்
அடைமழையில் நனைந்து வந்த நீ
சிந்தித்து போதும் மழையில் உண்மையில் நனைவோம் வா
என்று என்னையும் அழைத்தாய் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-19, 10:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

மேலே