இயற்கை

மரங்கள் பேசுகின்றன
செடிகொடிகளும் பேசுகின்றன
ஆனால் அவை நம் காதுகளுக்கு
எட்டுவதில்லை நாம் கேக்க முடிவதில்லை
நம் கண்கள் கொண்டு நாம்
எல்லாவற்றையும் பார்க்கமுடிவதில்லையே
பார்க்க முடியாதவை எத்தனையோ
அவை இல்லை என்று ஆகாது இதனால்
கற்களும் பேசுகின்றன அதை செதுக்கும்
சிற்பிக்கு அதைக் கேட்க முடியும்
கற்களுக்கு 'பாம்பின் காதோ' !
சிற்பியின் உளி தட்டலுக்கு பதில் சொல்ல !
நிலத்திற்கு நடுக்கம் உண்டு
அதன் மடியில் 'பளு' அதிகமாய்ப்போயின்
ஆருக்கு கோபமுண்டு வெள்ளமாய்ப்
பெருகிவரும்போது.........
காணும் பொருள் யாவையும் பேசும் பொருளே
கேட்கும் பொருளே ......
அணு அணுவாய் அவற்றுள் இயங்கி வரும்
இயற்கை இதைத்தான் நமக்கு சொல்லும்
நமக்குத்தான் இது கேட்பதில்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Dec-19, 9:02 am)
Tanglish : iyarkai
பார்வை : 416

மேலே