நகைச்சுவைக்காக8

அவள்- நீங்க புதுசா குடி வந்திருக்கிறீர்களா? கருப்பா குண்டா ஒருத்தர் போறாரே அவர் உங்களுக்கு என்ன வேணும்?

மற்றவள்- எனக்கு அது வேணும் இது வேணும்னு கேட்காம எங்க வீட்டுல வேற வழி இல்லாம கட்டிவைச்ச புருஷன்.

அவள்-கருப்பா இருந்தாலும் களையா தான் இருக்காரு. போகும் போது என்னை பார்த்துகிட்டே போனாரு.

மற்றவள்- அந்த குண்டன் வரட்டும் வச்சுக்கிறேன்.

அவள்- மனதிற்குள்- நான் வச்சது பத்திக்கிச்சு. வந்த வேலை முடிஞ்சிருச்சு.

நீதி-
நமது ஆற்றாமையை அடுத்தவரிடத்தில் குறிப்பாக அறியாதவர் இடத்தில் தெரியப்படுத்துவது நமக்கு நாமே பறித்துக் கொள்கின்ற குழி போன்றதாகும். உள்ளங்கள் ஒட்டாத நிலையில் இல்லங்கள் செழிப்படைவதில்லை. இல்லங்கள் செழிப்படையாமல் போவதற்கு இதுபோன்ற பல உரையாடல்கள் காரணமாக அமையலாம்.எச்சரிக்கை அவசியம்.

எழுதியவர் : அலாவுதீன் (9-Dec-19, 4:47 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே