சீர்வரிசை

தமிழர் பண்பாடு , கலாச்சாரம் மிகப்பழமையானது.உறவை,அன்பை,இல்லதைச் சிறப்பிக்கும் இனிய பண்பாடு.
மனித வாழ்வில்தான் எத்தனை விழாக்கள் ?,பண்டிகைகள் ?
வளைகாப்பு ,சீமந்தம்,ஏன் ,..மருந்து பிழிதல் ,பிறந்த குழந்தைக்கு பெயர் சுட்டால், காது குத்து,சடங்கு,நிச்சயதார்த்தம் ,திருமணவிழா.
சங்ககாலம் முன்பாக ..சுமார் 5000 ஆண்டுகள் காலம்தாண்டிய பண்பாட்டு வாழ்வில் .,,,
தீபாவளி வரிசை,
பொங்கல் வரிசை,
இப்படி பண்டிகைக்கு வரிசை கொடுக்கும் பழக்கம் நம் தமிழ் நாட்டில் மிக மிக நீண்ட காலமாய்.
இது மட்டுமல்ல விடு குடிபுகுதல்,திருமணம்,சடங்கு,என எதற்குமே உறவினர் சீர் செய்து வரிசை கொடுப்பது நம் பண்பாட்டு வழக்கம்.
முதல் நோக்கம்,உறவு விட்டு போகக்கூடாது.பார்க்காமல் கேட்டது பயிர் ,பார்க்க போகாமல் கேட்டது உறவு என்று ஒரு முதுமொழி உண்டு.ஆண்டுக்கு சிலமுறை மகள்வீடு ,சகோதரி வீடு என்று சென்று காண்பது மகிழ்ச்சி ,பாச வெளிப்பாடு.தை பொங்கல் முதல் நாள் ,,வாழை,கரும்பு,புது நெல் என விளையும் பொருட்களை உறவுக்கு வரிசை என கொடுத்து மகிழும் அன்பு ,பசவெளிப்படு.
விருந்து உபசரிப்பை திருக்குறள் போற்றும் , காக்கைக்கு சோறிடல் என்பதை புறநானுறு போற்றும் ,திருமண விழா சீர்வரிசை சிறப்பை கோவலன் கண்ணகி மணவிழா வர்ணனையில் இளங்கோவடிகள் இனிதே எடுத்துரைப்பார் .
எனவே பண்டிகை காலங்களில் தவறாது உறவை தேடிச்செல்வோம்.அன்பை நாடி விதைப்போம்,பழந்தமிழர் பண்பாட்டை மறவாது காப்போம்.

எழுதியவர் : (10-Dec-19, 5:28 pm)
சேர்த்தது : santhosh bhavan
பார்வை : 120

சிறந்த கட்டுரைகள்

மேலே