காதல் கசக்கும் தருணம்

காதல் கசக்கும் தருணம் உண்டாம் - நம்பவில்லை
நேற்றைய பொழுதில்.
மழைபொழியும் காலங்களில்
வானவில்லாய் உனைத்தேடி,
வழியெங்கும் விழியோடிய காலம்போய்
உன்னை கண்டால் மழையை காணும் போல்,
ஓடி மறைக்கிறேன்- நீ உன் குழந்தையுடன் செல்கையில்.
காதல் கசக்கும் தருணம் உண்டாம்.

எழுதியவர் : சந்தோஷ் பவன் (10-Dec-19, 6:02 pm)
சேர்த்தது : santhosh bhavan
பார்வை : 67

மேலே