சிந்தைநோகாது அகன்று தப்புமவன் உத்தமனே - நீதி வெண்பா 34

நேரிசை வெண்பா

சீலமில்லான் ஏதேனும் செப்பிடினும் தானந்தக்
காலம் இடமறிந்து கட்டுரைத்தே - ஏலவே
செப்புமவ னும்தானே சிந்தைநோ காதகன்று
தப்புமவன் உத்தமனே தான். 34

- நீதி வெண்பா

பொருளுரை:

ஒழுக்கமில்லாதவன் யாதாயினும் தீயதைச் சொன்னாலும், தான் அவன் சொல்லிய காலத்தையும் இடத்தையும் தெரிந்து, அவன் சொல்லியதற்கேற்ப உறுதி மொழிகளைச் சொல்லி அவனுக்குப் பதில் கொடுப்போனும் (அவன் சொல்லிய தீய வார்த்தையால்) தான் மனம் வருந்தாமல் நீங்கி (அவனுக்குத்) தப்பிப் போகின்றவனும் (ஆகிய இந்நற்குணங்களை உடையவன்) மேலானவனே ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Dec-19, 8:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 146

மேலே