தகப்பன் மகனிடம் சொன்ன வார்த்தை

தகப்பன் மகனிடம் சொன்ன வார்த்தை

இதுவரை யாரும் வாழாத
வாழ்க்கை நாங்கள் வாழ்ந்ததாக
சொல்லவில்லை

இதுவரை யாரும்
வளர்க்காத வகையில்
உனை நான் வளர்த்தேன்
என்று சொல்லவில்லை

இதுவரை யாரும்
திருமணம் செய்யாத வகையில்
திருமணம் செய்து கொண்டாய்
என்று சொல்லவில்லை

எல்லோருமே எல்லாரும்
செய்வதைத்தான் செய்திருக்கிறோம்

என்றாலும் !

பெற்றோரை அநாதரவாய்
விட்டுவிட்டு
இதுவரை யாரும் செய்யாததையா
செய்தேன் என்று சொல்லி
விடாதே !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Dec-19, 12:54 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 92

மேலே