கண்ணனின் குழலோசை

காற்றினிலே வந்த குழலோசை
என் மனதை ஏதோ செய்ய
என்னெதிரே காற்றில்
மிதந்து என்முன் நின்றது
அழகிய மயில் இறகு.........
அதில் கண்டுகொண்டேன் நான்
குழலூதும் என் கண்ணனை
இப்படியும் கீதத்தோடு எனக்கு
காட்சி தந்தான் கண்ணபெருமான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Dec-19, 1:50 pm)
பார்வை : 71

மேலே