ஆயிரம் ஆசைகள்

அலைகளே தழுவுங்கள்
கரைகளின் காத்திருப்பில்
புதைமணலாய்
உள்ளம் புதையும் முன்னே

பாவையின் பார்வையில்
ஊறிய மேகங்களே
பொழிந்திடுங்கள் பெருமழையாய்
உள்ளமும் கொதிக்கும் முன்னே

வண்ணத்தமிழ் வானவில்லே
வான்மொழியாய்
மணம்வீசிடுங்கள் மஞ்சளாய்
வார்த்தைகளும் கரையும் முன்னே

வீணையின் விரல்களில்
மலர்ந்திடும் மெல்லிசையே
சிணுங்கிடுங்கள் செவியோரம்
தென்றலும் வீசும் முன்னே

ஆயிரம் ஆசைகள்
பேசிடும் மௌனங்களே
ஆயிரம் ஆயிரமாய்
உதிக்கும் எண்ணங்களே
மெல்ல மெல்ல உரக்க
பேசிடுங்கள் உண்மைகளை
வாயும்வலித்து ஓயும்முன்னே!!
வாலிபமும் முறிந்து ஓயும்முன்னே!!!

எழுதியவர் : மேகலை (14-Dec-19, 5:24 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : aayiram aasaikal
பார்வை : 437

சிறந்த கவிதைகள்

மேலே