ஒரு மனசாட்சியின் அறிக்கை

அரசியல்வாதிகளே! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.
நான் காவல்துறை அதிகாரியாக இருந்திருந்தால் நீங்கள் மாற்றி மாற்றிக் கூறிக்கொள்ளும் குற்றச்சாட்டுகளையே ஒப்புதல் வாக்குமூலங்களாக பதிவு செய்து கைது செய்திருப்பேன்.
நான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்திருந்தால் குற்றங்கள் நிறைந்த உங்களை தனி தீவிற்கு நாடு கடத்தி இருந்திருப்பேன்.
உங்கள் நல்ல காலம்,
நான் அப்படிப்பட்ட பதவிகளில் இல்லை.

குற்றமுள்ள அரசியல்வாதிகளே!
நான் சர்வதிகார ஹிட்லராக இருந்திருந்தால் உங்களுக்கு ஏதிரான யுத்தத்தைத் தொடங்கி அரசியல்வாதி என்று மார்தாட்டுகிறாயே, அப்படி இனமே இருந்ததாக அடையாளம் தெரியாதவண்ணம் அழித்திருப்பேன்.
ஆனால் உங்களின் நல்ல காலம்,
நான் ஒரு அகிம்சாவதியாக இருக்கிறேன்.

ஊழல்களில் ஊறிய அரசியல்வாதிகளே! உங்களை போல் நான் விளம்பரமடையவில்லை.
விளம்பரம் செய்யும் அளவிற்கு நான் உங்களைப் போல் ஊழல்வாதியாகவில்லை.
மனிதனென்ற சுயக்கட்டுபாடுடன் நிலையில் இருக்கிறேன்.
யாரும் என்னால் பாதிக்கப்படவில்லை என்பதில் எனக்கு பெருமை.
அதுவே என் பயமின்மையின் மூலக்காரணம்.
கொளுந்திவிட்டெரியும் அருட்பெருஞ்சோதியை உங்களால் நெருங்க முடியாது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Dec-19, 5:07 pm)
பார்வை : 1085

மேலே