பயணம்
பயணங்கள்
முடிவதில்லை
மனிதனுக்கு
வாழ்க்கையில் எப்போதும்/
இறுதிப் பயணம்
உறுதியாகும் வரை/
வறுமை போக்க இளமை
கரையும் வரை/
கடல் கடந்த பயணம்
கனவோடு முடியும் /
கற்பனையோடு வாழ்வு
இரவும் பகலும் /
உழைப்பை நாடி
இரைப்பை நிறப்ப ஓடும் /
பயணமோ மனிதனுக்கு
யாத்திரையாய் மாறும் /
ஏழைக்கு இயந்திரம்
தன் கால்களே/
கையிருப்பு உள்ளவனுக்கு
வெண்ணிலும் பாதையே/