இரத்தமும் நரம்பும்
உணவில் அமிலத்தை புகுத்தி வைத்தோம்
உணர்வும் அமிலமாய் மாறிப்போச்சே
நீரைக் காரத்தால் தூய்மை செய்து
நித்தமும் அனைவரும் பருகுவதால்
இரத்தமும் நரம்பும் மாற்றம் கண்டு - உடலில்
பித்தத்தால் யுத்தமும் பெருகலாச்சே
சித்தமும் புத்தியும் சிதைவதற்கு - அறிவியல்
சேர்மமும் தனிமமும் பயிரை வளர்க்க
உத்தம எதிரியாய் மாறியதே உண்மை காரணமாச்சே
எத்தனை மருந்துகள் எவ்வளவு வரினும்
அத்தனையும் காசுக்காய் ஆன பின்னே
சத்தியமாய் அவ்வளவும் சங்கடத்தைத் தூண்டி
உணர்வற்ற சடலமாய் நம்மையே மாற்றி விடும்.
---- நன்னாடன்.