சூன்யமாக

வில்லையொத்த புருவம்

மைவிழியாள் தன்
மைவிழியால்

சீனத்து பொம்மையாய்
சித்திரம் காட்டுகிறாள்

சத்திரமான உடலுக்குள்ளே

நித்திலத் தேடலொத்த
கூட்டமொன்று

நித்திரை தொலைத்த
கூட்டமென்று

முத்திரை பெற்றது
சத்திரத்து வாசலிலே

சாத்திர சூத்திரம் சூன்யமாக

அம்பையொத்த பருவம்

எழுதியவர் : நா.சேகர் (18-Dec-19, 8:58 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 384

மேலே