எது சூனியம்
ஆகாயம்......?
சூனியம்..... வெற்றிடம்
ஆனால் அதனுள் அடக்கம்
அண்டகோளங்கள் அத்தனையும்
இயங்கும் நட்சத்திரங்கள்...
இயங்கா இறந்த நட்சத்திரங்கள்
கண்ணன் .... பாலகன்...
மண்ணுண்டான் ..... வாயைத்திற
என்றால் தாய் யசோதை
அவன் அகன்ற வாயில்
அவள் கண்டது ..... அண்டகோளங்கள்
அத்தனையும் ....இதனையேன்
தன்னையும் அதில் கண்டாள்.....
மாயோன்.... அவன்... பாலன் கண்ணன்
மறைந்தும் மறையாமலும் இருப்பவன் அவன்
பூஜ்யத்திற்குள்ளே இருப்பவன் அவன் !