கண்ணீரில் கழுவிட

காரிகையின் கண்களிலே
கண்ணீர்
காரணம் கேட்டால் விதியை
சாடிடுவாள்
நான் வாங்கிவந்த வரமென்று
நொந்திடுவாள்
என் பாவத்தின் சாபமென்று
பகர்ந்திடுவாள்
எனக்கெதிரான காலச் சதியென்று
கடுத்திடுவாள்
சுயபச்சாதாப பட்டியலுக்குள் இணைந்தவள்
கண்ணீரில் கழுவ நினைக்கிறாள்
தான் யாரென்று புரிய மறுக்கிறாள்
கண்ணகியின் காவியம் மறக்கிறாள்