தென்றல்மல்லிகை, மலர் அவள்

பாவம் பூந்தோட்டத்து மல்லிகைப்பூ
மலர்ந்திருந்தும் மலராததுபோல்
முகம் வாடி இருந்தது , வாசமும் குறைந்து,
ஓ.... மலரோடு உறவாடும் தென்றல்
ஏனோ இன்று வாராது போனது........
இங்கு வாராத தென்றல் அதோ
அங்கு வீசுதே ... பூங்காற்றாய்.. எப்படி
இது சாத்தியம்.......... ஹும் புரிந்துகொண்டேன் நான் ,
ஆமாம் அங்கு பூங்கோதை அவள்
தன் மன்னன் வரவில்லையே என்று ஏங்கி
மனவாட்டத்தில் இருக்க முகம் வாடி ,
அவளுக்கு ஆறுதல் மொழி கூற
தென்றல் போனதங்கு அவளைத் தழுவ
அவள் அதன் ஸ்பரிசத்தில் தன்
அன்னையின் வருடலல்லவோ கண்டாள்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (19-Dec-19, 12:36 pm)
பார்வை : 158

மேலே