எழுது கோலின் அவதாரம்

எழுது கோலின் அவதாரம்

கி.வா. ஜ வின் (கி.வா.ஜகந்நாதன்) நூற்றாண்டு வெளியீட்டில் அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்று.

எழுது கோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம் என்று பாரதியார் பாடுகிறார். எழுதுகோலை பூஜையில் வைத்து கும்பிடுவதால் இதை சொல்லவில்லை.
தெய்வம் எப்படி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அவதாரம் எடுக்கிறதோ அது போல எழுது கோலும் அவ்வாறு வெவ்வேறு அவதாரம் எடுத்துக்கொள்கிறது.
அந்த காலத்திலே காகிதமெல்லாம் கிடையாது. பனையோலைகளில்தான் எழுதி வந்தார்கள். எழுத்தாணியால் எழுதி வந்தார்கள். நாம் இப்போது பேனாவில் எவ்வளவு வேகமாக எழுதுகிறோமோ அவ்வளவு வேகமாக எழுத்தாணியால் எழுதி வந்தார்கள்.
மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் வேகமாக ஓலையில் எழுதுபவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எழுத்தாளர்கள் என்று பெயர். எழுத்தாளர் சேந்தன் என்ற புலவரே இருந்தார். கூலிக்கு எழுதிக்கொடுப்பவ்ர்களும் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு புலவரிடமும் யாரேனும் ஒருவராவது இருந்து அவர் சொன்னவற்றை எழுதி வருவார். அவருக்கு “கற்று சொல்லி” என்று பெயர். ஓலையில் கூலிக்கு எழுதியவர்கள் பெரிய புலவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஓரளவு தமிழில் பயிற்சி இருந்தால் போதும். அவர்கள் தவறு செய்வதும் உண்டு. “எழுதினவன் ஏட்டை கெடுத்தான், படித்தவன் பாட்டை கெடுத்தான்” என்ற பழமொழி வழக்கு உண்டு. ‘தவலை போயிற்று’ என்பதை ‘தலை போயிற்று’ என்று எழுதுகிறவர்களும் இருந்தார்கள்.
மலையாளத்தில் ஒரு பழ்மொழி உண்டு “மூண்ணாம் முறை பகர்ந்தும் போழ் ஸமுத்ரம் மூத்ர மாகுன்னு” என்பது. ஏட்டில் ஸமுத்திரம் என்று இருந்தது. அதை பிரதி பண்ணினவன் ‘ஸ” வை விட்டு விட்டு முத்ரம் என்று எழுதி விட்டான். அதை பார்த்த மற்றொருவன் “முத்ரமாக” இருக்காது “மூத்ரமாகத்தான்”இருக்க வேண்டும் என்று எழுதினான். ஸமுத்ரம் முத்ரமாகி பின் “மூத்ரமாகி விட்ட்து..
தமிழ் சங்கத்தில் நன்கு படித்தவ்ரகளே எழுத்தாளர்களாய் இருந்தனர். அவர்கள் ஒரு அறையில் உட்கார்ந்திருப்பாரகள். அறைக்கு வெளியே புலவர்கள் அமர்ந்திருப்பார்கள். யாராவது புதிய புலவர் ஒருவர் அங்கு வந்து தாம் இயற்றியிருக்கும் கவிதையை பாடி காட்டுவார். அவர் பாட பாட உள்ளே உள்ளவர்கள் அதை எழுதி கொள்வார்கள்.புலவர் பாடி முடித்தவுடன் சங்க புலவர்கள் “இந்த நூல் பழையது போல் இருக்கிறதே” என்று சொல்வார்கள். இந்த நூலின் பிரதி எங்களிடம் இருக்கிறதே என்பார்கள் . அதை பாடியவர் மறுப்பார். உடனே சங்க புலவர்கள் உள்ளிருந்து எழுத்தாளர்களை அந்த நூலை எடுத்து வர சொல்லுவார்கள். எழுத்தாளரும் அப்பொழ்துதான் எழுதியிருந்த அந்த பாடலை பழைய நூல் போல கொண்டு வந்து காட்டுவார். அதை பாடிய புலவர் வயிரெறிந்து செல்வார்.
இப்படி அக்ரம்மாய் நடந்து வருவதை “இடைக்காட்டி” என்னும் புலவர் கேள்வியுற்றார். அவர் இதற்கு ஒரு பாடம் கற்பிக்க் தமிழ் சங்கத்துக்கு சென்றார். தாம் ஒரு நூல் பாடியிருப்பதாக சொன்னார். “வெண்பாவால் ஆனது அந்த நூல் என்று சொன்னார்” சங்க புலவர்கள் அதை சொல்லும்படி சொன்னார்கள். இடைக்காடர் சொல்வதை எழுதிக்கொள்ள உள்ளே எழுத்தாளர்கள் தயாராக இருந்தார்கள்.
இடைக்காடர் பாடத்தொடங்கியவர் பாட்டின் நடுவில் காக்கை முதலியவற்றின் ஒலியை கவிதையோடு இணைத்து பாடினார். அந்த ஒலியை எப்படி எழுத்தால் எழுதுவது என்று தெரியாமல் எழுத்தாளர் திகைத்தார்.அதற்குள் மேலே சில பாடல்களை இடைக்காடர் சொல்லி விட்டார்.
சங்க புலவர்கள் இந்த நூல் எங்களிடம் இருக்கிறதே என்று வழக்கம்போல சொல்ல எங்கே எடுத்து வர சொல்லுங்கள் என்று கேட்டார். உள்லே இருந்த எழுத்தாளர்களை வருவித்து ஏட்டை பார்த்த பொழுது அரையும் குறையுமாக எழுதியிருந்தார்கள். திருட்டு வெளிப்பட்டு விட்ட்து. இனி இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி விட்டு சென்றராம் இடைக்காடர் என்னும் புலவர்.
காக்கையிலிருந்து க..றென்ன,,காகையின் ஒலியை எப்படி எழுதுவது ஏதோ ஒருவகையில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதே போல் ஆட்டை ஓட்டி வரும் பொழுது கோனான் நாக்கை ஒருவகையாக மடித்து ஓர் ஒலியை எழுப்புவான். அதை எப்படி எழுதுவது? இச்..இச்..என்றுதான் எழுத வேண்டும். அவன் எழுப்பும் ஒலி தெரியாவிட்டால் அந்த எழுத்துக்களிலிருந்து அதை தெரிந்து கொள்ளமுடியாது.
எழுத்தாணியில் குண்டெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, என்றெல்லாம் பலவகை உண்டு. ஓலையை சீவுவதற்கு கத்தி, ஒரு பக்கத்திலும் எழுத்தாணி ஒரு பக்கத்திலும் இருக்க மடக்கி கொள்ளும்படி இருக்கும். மடக்காமலேயேயும் இருக்கும் எழுத்தாணியும் உண்டு. மரப்பிடி போட்ட எழுத்தாணியும் உண்டு.
எழுத்தாணி போன பிறகு இறகு பேனா வந்த்து. பறவைகளின் இறகின் அடிப்பாகத்தை கூர்மையாக சீவி அதை மையில் தோய்த்து எழுதினார்கள்.அதை கூர்மையாக சீவ சிறிய கத்தி ஒன்று இருக்கும். அந்த கத்திக்குத்தான் ‘பேனா கத்தி’ என்று பெயர் வைத்தார்கள். பூர்ஜ பத்திரத்தில் ஒரு வகை தூரிகையாலும் பங்காலத்தில் எழுதினார்கள். பிறகு இரும்பு முள் வந்த்து. அந்த முள்ளுக்கு “நிப்” என்று ஆங்கிலத்தில் பெயர். அதை செருக ஒரு குவளை, அதற்கு ஒரு கட்டை இப்படி மூன்று அலங்காரங்களோடு உருவான அக்கு பேனாவை மைக்கூட்டில் தேய்த்து எழுதினார்கள். எழுதுகோல் எழுத்தாணியாய் இருந்து பேனாவாயிற்று. பென் என்று அங்கிலத்தில் வழங்குவதையே நாம் பேனா என்று அழகிய தமிழ் வடிவம் கொடுத்து வழங்கி வருகிறோம். யாழ்ப்பாணத்துக்காரரகள் பேனா என்று சொல்வதில்லை பேனை என்றுதான் சொல்கிறார்கள். ‘பென்னிலிருந்து’ ‘பேனா’ வந்து ‘பேனாவிலிருந்து பேனை’ வந்திருக்க வேண்டும்.
எக்கு பேனாவுக்கு மைக்கூடு அந்த காலத்தில் கடுக்காய் மையை அவர்களே தயாரித்து கொள்வார்கள். அது நல்ல கறுப்பாக இருக்கும். நன்றாக எழுதுகிறவர்கள் அந்த மையினால் எழுதினால் அச்சு கோர்த்தாற்போலவே இருக்கும். மை பவுடர் வாங்கி மை கரைத்து கொள்வார்கள். மைவில்லையும் இருந்த்து.
எழுது கோல் பேனா வடிவம் மட்டுமா எடுத்த்து, பென்சில் வடிவமும் எடுத்த்து.. காகிதத்தில் எழுதுவது காகித பென்சில், சிலேட்டில் எழுதுவது சிலேட்டு பென்சில். அதற்கு சிலேட்டு குச்சி, பலப்பம் என்ற திரு நாமங்கள் உண்டு.
பிறகு வந்த்து ஊற்றுப்பேனா. (Fountain pen) பேனாக்களில்தான் எத்தனை வகைகள் வந்து விட்டன. கழுத்தை திருகி மையை போட்டுக்கொள்ளும் பேனாக்கள் மறைந்து வருகின்றன. பின்னாலே பம்பை வைத்து மைப்புட்டியில் வைத்து பம்ப் இயக்கி மையை உறிஞ்சும்படி உள்ள பேனாக்களே இப்போது அதிகம். பின்புறத்தை திருகி மையை உறிஞ்சி செய்யும் பேனாவும் இருக்கிறது. பால் பாயிண்ட் பேனாவும் வந்திருக்கிறது.


பதிப்பு :“புது டயரி” கி.வா.ஜவின் நூற்றாண்டு வெளியீடு கலா நிலையம், 244 ப.எண், ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Dec-19, 11:08 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே