தன்னம்பிக்கை

நான் உன்னோடு பேச போகிறேன்..
என்ன வேண்டும் இவ்வுலகில் உனக்கு..இது வேண்டும் அது வேண்டும்...சிறு குழந்தைகள் பொம்மைக்கு அடம்பிடிக்கும்...
பெரியவர்கள் தன் சொல்லுக்கு அடங்க பலரை தேடுபவர்....
நாம் ஏன் வாழவேண்டும் என சில நொடிகள் யோசிக்க வைக்கும்..... சில
நொடிகள் வாழ்க்கை நமக்கே நமக்கு
என தோனும்...

உன்னால் முடியும் என்பது உன்னை தவிர அனைவருக்கும் தெரியும்...அதை நீ உணரும் போது
வெற்றிகள் வருகிறது....
ஆசைகள் வரும்போதே ஏமாற்றமும் வரும்...என உணர வேண்டும்..

வருத்தங்கள் கவலைகள் மாற்றங்கள் உனக்குள்ளே நீ தான்
வரவைக்க வேண்டும்...அவர் பேசுகிறார்.. இவர் பேசுகிறார் ..என் மூளையில் இருந்து முடங்கி வீண் செய்யாதே, வாழ்க்கை அழகு ...மாணவனாய் இருக்கும் போது சின்ன சின்ன விஷயங்களை சின்னதாய் பாருங்கள்...உனக்கான
சந்தர்ப்பம் உன்னிடத்தில் தான் உள்ளது...
சிந்தித்து பார்க்க உனக்கான வாழ்க்கை விட உலகில் எத்துணை பேர் எதுவும் இல்லாமல் கடைசி வரைக்கும் தன் வாழ்க்கையில் ஏங்கி ஏங்கி வாழ்கின்றனர்....
புரிந்து கொள்ள கஷ்டமாக தான்
இருக்கும்....
புரிந்தாலும் மனம் ஏற்க கஷ்டப்படும்...
அனைத்தையும் தாண்டி அனைத்தையும் வென்று உன்னை நீ காட்டு......
எந்நிலையிலும் தன் நிலையை இழந்து விட வேண்டும்....

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Dec-19, 5:28 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 634

மேலே