இந்த தடவையும் போன தடவை மாதிரியே

டேய் பேரப் பையா சுரேசு, பிரசவத்துக்கு உன்னோட மனைவி பாஞ்சாலிய ஆசுப்பத்திரில நேத்து சேத்தே..போயிட்டு வந்தயே என்ன தகவல்டா
.
@@@@@@
போன தடவை மாதிரி தான் பாட்டிம்மா.

@@@@
என்னடா போன தடவை மாதிரி?

@@@@@
மொதப் பிரசவத்தில என்ன ஆச்சு?

@@@@@@
ரட்டைக் கொழந்தைங்க. ரண்டும் பசங்க.

@@@@@@
இப்பவும் அப்பிடியே பாட்டிம்மா.

@@@@@@
அட ரண்டாவது பிரசவத்திலயும் ரட்டைப் பசங்களா? ரொம்ப சந்தோஷம்டா.

@@@@@@

சரி. மொதப் பொறந்த ரண்டுக்கும் 'விநாயக், ''சிவ்'வு(Shiv)ன்னு பேருங்கள வச்ச. இப்பப் பொறந்திருக்கிற ரண்டு பசங்களுக்கும் என்ன பேருங்கள வைக்கப்போற?
@@@@@@
அதுதான் ஒண்ணும் புரியல பாட்டிம்மா. ஒரே மாதிரி பேரா இருந்தா நல்லது.
இப்ப ஞாபகம் வந்திருச்சு. ஒரு பையனுக்கு 'அரவ்', இன்னொரு பையனுக்கு 'ஆரவ்'-ன்னு பேரு வச்சிருலாம்.
@@@@@
நல்லதுடா பேரா. நீ இந்தத் தடவை பசங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வச்சு கேவலப்படுத்திருவயோன்னு நெனச்சேன்.
நல்ல வேளை எல்லாரும் நம்மள மதிக்கிற மாதிரி இந்திப் பேருங்கள வச்சிட்டே. ரொம்ப பெருமையா இருக்குதுடா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@SShiv = Lord Shiva
Ara, Aarav = peaceful
◆◆◆◆◆◆◆●●●●●●●●●●◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
இந்திப் பெயர் மோகம் தமிழரின் தீராத தாகம். தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (22-Dec-19, 3:32 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே