ஏன்டா உனக்கு வெக்கமா இல்ல
ஏன்டா உனக்கு வெக்கமா இல்ல?
@@@@@@@@@@@@@@@@@@@@
நான் எதுக்குமா வெக்கப்படணும்?
@@@@@@@@@@@
உன்னாட்டம் இருக்கிற வயசுப் பசங்களப் பாரு அப்பத் தெரியும் நீயேன் வெக்கப்படனும்னு.
@@@@@@@@@
நெறையப் பேரைத் தினமும் பாத்துட்டுதாம்மா இருக்கிறேன்,
@@@@@@@@@@@@@@@@@@
நீ என்னத்தப் பாத்த? பதினஞ்சு வயசு பையனிலிருந்து முக்கா கெழவன் வரைக்கும் எல்லாம் குறுந்தாடி வச்சுட்டு திரியறாங்க. நீ என்னடா இன்னா மொழூக்கு மூஞ்சியா மொட்டை மூஞ்சியா வச்சிட்டு இருக்கிறயே!
@@@@@@@@@@
அவுங்கெல்லாம் சினிமா பாத்துட்டு, தொலைக்காட்சி தொடர்களப் பாக்கிறவங்க. நாந்தான் அந்த ரண்டு சனியன்களையும் பாக்கிறதில்ல. புத்தகங்களைப் படிக்கறதும் இயற்கையை ரசிக்கறதும் தானே என்னோட பொழுதுபோக்குன்னு உனக்குத் தெரியாதா அம்மா,
@@@@@@@
ஆமாம்டா மகனே. நீ அப்பா மாதிரியே. அதை நான் மறந்துட்டேன்டா.