மூன்று வழிகள் -சிறந்த வழி
மகனே, நீ நல்லாப் படிக்கிற. படிச்சு முடிச்சிட்டு நம்ம தொழிற்சாலையை நீ தான் நிர்வாகம் செய்யணும்.
@@@@@@@
அப்பா நம்ம தொழிற்சாலையில கிடைக்கிற வருமானத்தைவிட அதிகமாக சம்பாதிக்க மூன்று வழிகள் இருக்குது. அந்த மூன்றில சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போறேன்.
@@@@@@
மூன்று வழிகளா?
@@@@@@
ஆமாம் திரைப்பட நடிகனாகி கோடிகோடியா சம்பாதிப்பது முதல்வழி. அதுக்கு புதுவிதமான சேட்டைகள் தெரிஞ்சிருக்கணும் அதிர்ஷ்டமும் கைகொடுக்கணும். அது கோடில ஒருத்தருக்குதான் கைகொடுக்கும். இரண்டாவது வழி அரசியல். பேச்சுத் திறமையால் மக்களைக் கவர்ந்திழுக்கணும். பொய்யை மெய்யாக்கவும் மெய்யைப் பொய்யாக்கவும் திறமை வேணும். விசிலடிக்கவும் கூடவே சுத்தறதுக்கும் கைதேர்ந்த உடல் வலிமையுள்ள பிழைப்பில்லாம திரியற பயல்கள் பலரை வச்சு தீனிபோட்டு பராமரிக்கணும் அதுவும் வேண்டாம். சரிப்படாது.
@@@@@
சரி மூன்றாவது வழியைச் சொல்லடா மகனே.
@@@@@@@
மூன்றாவது வழி போலிச்சாமியார் ஆவது.
@@####
போலிச் சாமியாரா?
@@@@@@@@
கலியுகத்தில் நல்ல சாமியார்களைவிட போலிச் சாமியார்களைத் தான் மக்கள் நம்பறாங்க. போலிச்சாமியார்கள் பலர் பல கோடிகளுக்கு அதிபதிகளா இருக்கிறாங்க. இதுதான் மிகச்சிறந்த வழி. உவகில் எல்லா சுகத்தையும் அனுபவித்து ராஜபோகமா வாழறவங்க போலிச்சாமியார்கள் மட்டுமே.
இதுதான் என்னுடைய வழி.
@@@@@@@
நீ சொல்லற மாதிரிதான் ஊடகங்களில் செய்தி வெளியாகுது. இருந்தாலும்...
@@@@@@@
ஓ... அதில இருக்கிற ஆபத்தைச் சொல்லறீங்களா?
@@@@@@
ஆமாம்டா மகனே.
@@@@@@
அப்பா ஆன்மீகக் கவசம் போட்டுட்டா என்னை யாரும் ஒண்ணும் செய்யமுடியாதுப்பா. தலைக்கவசம் உயிர் காக்க. ஆன்மீகக் கவசம் போலிச் சாமியார்களைக் காக்க. கவலையை விடுங்க.
@@@@#@
???°????????