எல்லாவற்றையும்

கரிகாலன் கட்டிய நீர் தடுக்கும் அணை
கடுமையான உறுதியாய் ஆயிரமாண்டுக்கு பிறகும்
அருண்மொழித்தேவன் கட்டிய சிவாலயம்
அதிசயத்தில் ஒன்றாய் ஆயிரமாண்டு கடந்தும்
அனைத்தையும் திருட வந்த வெள்ளையனும்
அமைத்த இரும்புப் பாதையும் நூற்றாண்டு கடந்து
ஆற்றல் மிக்க இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசியல் வித்தகர்களாலும் அரசியல் ஞானிகளாலும்
அடிகோலப்பட்ட பாலங்களும் பள்ளிக்கூடங்களும்
தாகத்தைத் தீர்க்கும் தண்ணீர் மாடங்களும்
தாங்குவதில்லை கட்டட வடிவமாய் இரண்டாண்டுகள் கூட
வெளிப்புறப் பார்வைக்கே இவ்வளவு திறமை எனில்
உணர்வுக்கும் உரிமைக்கும் உருவாக்கும் சட்டத்தால்
எத்தகைய குற்றம் வரும் என்பதை உணர்ந்தோமா?
----- நன்னாடன்.