மனமே மனமே

எவ்வளவு போராட்டங்கள்
எவ்வளவு இடர்பாடுகள்
எவ்வளவு தொந்தரவுகள்
கள்ளத்தனமாய் நடக்க நினைக்கும்
கானல் நீரான மனத்தை
கட்டுப்பாடுடன் வைக்க.

போதையில் பாதைமாறி
பணத்தால் குணம் மாறி
குரூரத்தால் குதுகலமடைந்து
வரிந்து கட்டிக் கொண்டு வம்பிழுத்து
இயலாதோரிடம் வல்லமைக் காட்டும்
வாலிப மனத்தை அடக்கிடணும்.

பசித்தாலும் பரவசநிலை
ருசித்தாலும் இரம்மிய நிலை
துயரிலும் அடங்கா நிலை
இன்பத்திலும் இருமடங்கு பலமாகி
எப்போதும் எதோ நிலையில்
இயங்கும் மனத்தை தடுத்திடணும்.

பகலில் பம்பிக் கொண்டும்
இரவில் ஆகாய பூமிக்கு ஆர்ப்பரித்தும்
சொல்லொன்னத் துயரத்தைக்காட்டியும்
கிடுக்க வைத்தும் கிழவனாக்கியும்
ஆயிரம் யானைகள் கூடி அழுத்துவதாய்
அனுதினமும் இம்சைக்கும் மனதை
அதன்படி நடக்காமல் பார்த்துக்கணும்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-19, 9:45 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : maname maname
பார்வை : 172

மேலே