விவசாயி கண்ணீர்

கதிரவன் வருகிறான்
கதிர்தான் வருவதில்லை

ஹான்சை அதிக விலை
கொடுத்து வாங்குவோர்
பீன்சை வாங்குவதில்லை

வெங்காயம்
விளைவதில்லை மண்ணில்
பெருங்காயம்
விளைகின்றது கண்ணில்

வாழை கூட இவனை வாழ வைப்பதில்லை
கம்பு விதைத்தால் கூட
காம்புதான் விளைகிறது

சோளம் விதைத்தால்
சோகமே விளைகிறது

ரதியாக வரவேண்டிய நதி
சதியாக வருகின்றது
இதுதான் இவன் விதி

தை பிறந்தால்
பொங்கல் வருகிறது
இவன் நிலத்தில் அடிக்கல் நாட்ட செங்கல் வருகிறது

கன்னடத்திலிருந்து வராத நீர்
இவன் கண் தடத்தில் இருந்து வருகின்றது

இவன் குளத்திற்கும் வயிறு நிறையவில்லை
இவன் குலத்திற்கும் வயிறு நிறையவில்லை

மாரி கொழிக்கட்டும்
இவன் நிலைமாறி செழிக்கட்டும்

எழுதியவர் : குமார் (25-Dec-19, 7:59 am)
Tanglish : vivasaayi kanneer
பார்வை : 191

மேலே