சாய்ந்தாடிய மழைச்சாரல்

கடந்தது ஒரு புயல்
கருவுருகிறது
இன்னொரு புயல்...
வரைபடம் வழிகாட்டுகிறது
கடக்கும் திசையை....
விவாதமேடையில் விளக்கவுரை....
சிமினிவிளக்கில் சிறுபூச்சிகளாய்
வாழ்விழந்த மக்கள் ...
மறுவாழ்வைத்தேடி மனிதர்களும்
மரங்களும் சாலையிலே....
சாரைப்பாம்பாய் ஊர்ந்து செல்கின்றன
சாய்ந்தாடிய மழைச்சாரல்...மௌனமாய்

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (25-Dec-19, 10:56 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 114

மேலே