பயணம்

"பயணம்" என்ற வார்த்தை என்னை உணர்வு பூர்வமாக சிலிர்க்க வைக்கிறது. மனிதர்கள் பலவிதம். சிலருக்கு தொலை தொடர்பு கருவி பிடிக்கும் , சிலருக்கு படம் பார்க்க பிடிக்கும், சிலருக்கு இயற்கை ரசிக்க பிடிக்கும் . என் போன்ற சிலருக்கு பயணம் பிடிக்கும். பயணம் விரும்பி ஆகிய நான் எத்துணை பயணம் மேற்கொண்டாலும் என் இதய கோட்டையில் பதிந்து கிடப்பது சில பயணம் மட்டுமே . அதிலும் இன்றும் ஓடி கொண்டிருக்கும் நிகழ்வுகள் சில பயணம் சார்ந்ததுதான் .

என் கல்லூரி பயணம், என் காதல் பயணம் தாண்டி என் கன்று குட்டி, செல்ல குட்டி என்றெல்லாம் கொஞ்சி விளையாடும் என் குட்டி மகனோடும் என் அன்பு கணவனோடும் சென்ற திருச்செந்தூர் பயணம் என் மனம் திருடிய பயணம்.

மூன்று மாதம் முன்பு முடிவு செய்து. பஸ்ஸில் இல்லை இல்லை, ரயில் பயணம் இல்லை இல்லை, கால் டாக்ஸி தான் சரி, என்றெல்லாம் விவாதம் நடத்தி இறுதியில் ரயில் பயணம் தான் என முடிவெடுத்தோம். தூத்துக்குடி ரயில் ஏறி உட்கார்ந்ததும் ஒன்றரை வயது நிறைவு பெற்ற என் செல்ல மகன் உறங்கிவிட்டான். என் கணவன் என்னை பார்க்க நான் அவரை பார்க்க இருவருக்குள்ளும் ஒரு வித பதற்றம் நிலவுவதை உணர்ந்தோம். கைகளை பற்றி கொண்டு சுற்றி இருக்கும் சக பயணிகளை ஒரு சந்தேக காணோட்டதோடு உற்று ஒவ்வொருவரை பார்த்தோம். இறுதியில் இருவரும் ஒரு விவாதற்திற்கு வந்தோம். உடன் யாரும் பாதுகாப்புக்கு அழைத்து வந்திருக்கலாமோ? இல்லை இல்லை தனிமை தான் இன்பம் தரும். இருந்தாலும் நம் முதல் பயணம் முன் பின் அனுபவம் இல்லை தனியாக எப்படி என்று நன் கூற இப்போது எதற்கு இந்த பேச்சு பேசாமல் உட்கார் என்று என் வாயை என் கணவர் அடைத்தார் . சிறிது நேரம் அமைதி நிலவ சில்லு சில்லு என்ற காற்றோடு கூகூகூகூகூ.... என ரயில் கிளம்பும் போது உள்ளூர உள்ள அச்சம் நீங்கி ஒரு இன்பம் வந்தது . இருவரும் முகம் பார்த்து சிறிது கொள்ளும் போது அம்மா என்ற மெல்லிய குரல் கேட்க மடியில் என் செல்ல மகன் புன்னகை பார்த்ததும் சொல்ல முடியாத இன்பம் உள்ளூர பொங்கியது.

மாற்றி மாற்றி என் மகனுக்கு முத்த மழை பொழிந்து விட்டோம் நானும் என் அன்பு கணவரும். புது புது முகங்கள் வித்யாசமான மனிதர்கள் . பயண சீட்டு இல்லாத பயணிகள், நோயாளிகள் , இளம் தம்பதிகள், எல்லாம் கண்டு கழித்து சென்றோம்.


மதுரை தமிழ், தூத்துக்குடி தமிழ் , என என் தமிழின் உச்சரிப்பில் வித்தியாசம் கண்டு ரசித்தேன் . சில இடங்களில் அதை பிரயோக படுத்தி பார்த்தோம். தூத்துக்குடி உப்பின் வாசனை அந்த இயற்கை சூழல் எங்கள் துன்பங்களை அடியோடு மறக்க வைத்து விட்டது .

திருச்செந்தூரில் முழுதாக எங்களை தொலைத்து விட்டோம். கடல்!!!!! அதை பற்றி சொல்லவும் வார்த்தை இல்லை, எழுதவும் வார்த்தை இல்லை .


முருகரின் முகமும் கடலின் அழகும் கண்டு உறைந்து போன நிமிடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது.
என் பயணத்தில் உறைந்து போன சுவடுகள் இதோ ...

முதன் முதலில் கடலில் கால் நனைத்து சிரித்த என் மகனின் புன்னகை

இரவில் மூவரும் கை கோர்த்தது நடந்து சென்ற பாதை

கடல் காற்றில் குளிர்ந்து போன எங்கள் தேகத்திற்கு சூடேற்ற கிடைத்த சுண்டல்

தூரத்தில் நின்று ரசித்த கடல் அலை

வைரமுத்துவின் தண்ணீர் தேசம் பற்றிய எங்கள் கார சார விவாதம்

சிறிய சிற்றுண்டி இல் கிடைத்த மல்லிகை பூ இட்லி

கோவை மக்களை அங்கே சந்தித்து வியப்பாக விசாரித்து இன்றும் உறவினராய் இருக்கும் அந்த சில மனிதர்கள்

எப்போதும் கோபம் கொள்ளும் என் அன்பு கணவர் அன்பு மட்டும் பொழிந்த அந்த நாட்கள்

கடல் நீரில் ஊறி ஊறி பஞ்சு போல் ஆன என் மகனின் பிஞ்சு பாதங்கள் எல்லாம் இன்றும் அப்படியே இருக்கிறது என் மனதில் .

எல்லாம் அனுபவித்து ருசித்த இன்ப துளிகள் தான் . திரும்ப கோவை மண்ணை மிதித்ததும் ஒரு வித மகிழ்ச்சி இருக்கிறதே அதையும் சொல்ல வார்த்தை இல்லை .


இந்த ஊர் சுற்றி பயணத்தின் முடிவில் என் கணவர் வாகனம் எடுத்து வர சென்றார் அங்கே நான் கண்ட காட்சி என்னை இன்னும் கண் கலங்க வைக்கிறது .


சாலை ஓரம் படுத்து கிடக்கும் மனிதர்களில் ஒரு சிறுவன் மேல் சட்டை போடாமல் படுத்து கிடந்தான். குளிர் தாங்க முடியாமல் அந்த சிறுவன் துடித்து கொண்டு அழுவதை பார்த்ததும் என் மனம் பத பதைத்து விட்டது. குளிர் தாங்க முடியாமல் இருப்பதாய் அவன் தந்தையை எழுப்பி சொன்னான் . அவன் தந்தையோ பேசாமல் படு என்று அடித்து விட்டு திரும்பி படுத்து கொண்டார் . அந்த சிறுவன் பட்ட துன்பத்தை பார்க்க முடியாமல் அழுது கொண்டு நின்றேன் .


என் கணவர் வந்து விடவே வண்டி ஏறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். 10 கிலோ மீட்டர் சென்ற பிறகு தான் என் கணவரிடம் நிகழ்ந்ததை சொன்னேன் . உடனே அவர் வண்டியை நிறுத்தி விட்டு என்னை திரும்பி முட்டாள் தான் அழுவார்கள். நீ புத்திசாலியாக இருந்திருந்தால் நம்மிடம் தான் போர்வை இருக்கிறதே எடுத்து கொடுத்திருப்பாய் என்று திட்டிவிட்டார்.


அந்த நொடி நான் நொறுங்கி போய்விட்டேன் . என் முட்டாள்தனத்தை எண்ணி எண்ணி இன்னும் வருந்துகிறேன்.


திருச்செந்தூர் பயணத்தின் புராணம் என் மனதை பக்குவ படுத்திய புராணம்...

எழுதியவர் : வெண்ணிலாபாரதி (27-Dec-19, 11:18 am)
சேர்த்தது : பாக்கியலட்சுமி
Tanglish : payanam
பார்வை : 183

சிறந்த கட்டுரைகள்

மேலே