அவளும் நிலவும்
கனவொன்று கண்டேனடி இன்று நான்
கனவில் நீல வான வெண்ணிலா
மண்ணில் ஏனோ உலா விட......
' ஏன் வான்நிலா இங்கு வந்தாய் '
என்று நான் கேட்க சொன்னது
நிலா' என்னைப்போல் மண் னிலோர்
நிலவைக் கண்டேன் அது யார்
என்று காணவே என்றது ....' அன்னிலா
வான்நிலவே அறிந்திடுவாய் என் காதலியே '
என்றேன் ...... பின் நான் திரும்பி
பார்க்கும் முன்னே வான்நிலா
வானை சென்றடைந்த தே
நிலவண்ண என்னவள் முகம் கண்டு
இப்படி மயங்கியதோ வான்நிலவும்

