நட்பு

அட்டைப்பூச்சி.....
ரத்தம் உறிஞ்சி
வயிறு முட்ட ரத்தத்தை
உள்ளிழுத்துக்கொண்ட பின்னே
பற்றிய உடலை விட்டுவிடும்
பொய்யான நண்பனும் இப்படித்தான்
வேண்டியதெல்லாம் பெற்ற பின்னே
ஒட்டி உறவாடிய நண்பனை
நடுத்தெருவில் விட்டு விடுவான்
காணாமல் போய்விடுவான்
நல்ல நண்பனை கண்டு அறிந்தபின்
நட்பை வளர்த்தல் நட்பிற்கு அழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (31-Dec-19, 4:15 pm)
Tanglish : natpu
பார்வை : 551

மேலே